பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் கோவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஆசிரியர்கள் உட்பட கல்வி சாரா ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
எனவே, பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடிந்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும்,
12 - 18 வயதிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன.
பாடசாலைகள் மீண்டும் தொடங்க குறித்த வயதினருக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் உட்பட சர்வதேச நிறுவனங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பல அளவுகோல்களை சுட்டிக்காட்டியுள்ளன.
குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடங்கியவுடன், தரம் 7 முதல் தரம் 13 வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடலாம் என குறிப்பிட்டுள்ளார்.