22,000 அரச ஊழியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட ஆசிரியர் வெற்றிடம் காரணமாக 22,000 பயிற்சி பெறாத அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாடசாலைகளில் கற்பிப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டதன் மூலம், ஆரம்பக்கல்வியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் 1,000 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படும் எனவும், தான் கல்வி அமைச்சர் பதவியில் இருக்கும் வரை எந்தவொரு பாடசாலையும் தேசிய பாடசாலையாக மாற்றப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 499 தேசிய பாடசாலைகளில் 35,000 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். அவர்களில் 14,000 ஆசிரியர்கள் இடமாற்றம் கோரியுள்ளனர். இதற்கு 20 முக்கிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இதை நான் தலையிட்டு இதை தீர்த்து வைத்தேன்.
499 தேசிய பாடசாலைகளில் 35,000 ஆசிரியர்கள் உள்ள நிலையில், 1,000 பாடசாலைகளை உருவாக்கினால் 100,000 ஆசிரியர்கள் இருப்பார்கள். இது தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.
இந்த நிலையில், அபிவிருத்தி அதிகாரிகள் 22,000 பேரை தேர்வு இல்லாமல் எடுத்து, பாடம் கற்பிக்க விடுகின்றமை பொருத்தமானதாக அமையாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.