முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை குறைபாடுகள்: விசாரணை திடீர் நிறுத்தம்
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் இன்றையதினம் ஆரம்ப புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென இடைநிறுத்தப்பட்டிருந்தமையானது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மப்பிள்ளை பவுள்ராஜினால், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு, முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கடிதம் கடந்த 17.03.2026 அன்று வழங்கப்பட்டிருந்தது.
கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள குறித்த வைத்தியசாலையில் மக்கள் சிரமமின்றி சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், வைத்தியசாலையின் உள் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
குறிப்பாக, வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி தனது கடமைகளை முறையாக மேற்கொள்வதில்லை என்றும், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றார் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் குறைபாடுகள் தொடர்பான விசாரணை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (19) காலை 9 மணிக்கு விசாரணைக்கு வருமாறு பணிப்பாளர் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து ஆதாரங்களுடனும் பணிமனைக்கு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் தொம்மப்பிள்ளை பவுள்ராஜ் சென்றபோது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி விசாரணை திடீரென நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri