பாடசாலை மாணவர்கள் ஆளுநருடன் பேசலாம்! வெளியான தகவல்
வட மாகாண பாடசாலைகளில் கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் பாடசாலைகளில் இருந்தவாறு தமது கருத்துக்களை வடமாகாண ஆளுநருக்கு தெரிவிக்க முடியும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் ஆளுநருடன் பேச முடிவதோடு குறித்த வலை அமைப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளரும் தொடர்பில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
முன்கூட்டிய அறிவுறுத்தல்கள்
குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமா மகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆளுநரின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்களின் கருத்துக்களை ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளருடன் பகிர்ந்து கொள்ளும் செயற்பாடு இடம்பெற உள்ளது.
அதற்கான சகல நடவடிக்கைகளும் வட மாகாண கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு
வருகின்ற நிலையில் எதிர்வரும் வாரத்தில் குறித்த செயற்பாட்டை ஆரம்பிக்க
முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
