பாடசாலை மாணவிகள் மத்தியில் கருத்தரித்தல் அதிகரிப்பு
பாடசாலை மாணவிகள் கருத்தரிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைதல் அதிகரித்துள்ளதுடன் மாணவிகள் தாய்மார்களாகும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சுடன் இணைந்து இளம் தலைமுறையினருக்கு பாலியல் கல்வியை தெளிவாக வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாடசாலை மாணவிகள் தவறான முறையில் பிரசவிக்கும் சிசுக்கள் சமூகத்தில் நிர்க்கதியாக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் இந்தப் பிரச்சினையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



