முல்லைத்தீவில் அடிகாயங்களுடன் பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதி!
உடலில் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பாடசாலை மாணவன் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருட்டு மடு என்ற கிராமத்தில் வசிக்கும் மாணவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
தரம் 10இல் கல்வி கற்கும் 15 வயதுடைய இந்த மாணவன், தன்னுடன் கல்வி பயிலும் மாணவி ஒருவரை கேலி செய்தமைக்காக குறித்த மாணவியின் வீட்டிற்கு அழைக்கப்பட்டு அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவமனை பொலிஸார் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



