விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்
ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை - ஹொரண வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள துணை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள், ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பண்டாரகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
பாடசாலை மாணவன்
உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியான பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹொரணை மருத்துவமனை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam