கையடக்கத் தொலைபேசியினால் ஏற்பட்ட குழப்பம் : பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு
கையடக்கத் தொலைபேசியினால் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணை
குறித்த மாணவியின் தந்தை வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது அவரது கையடக்கத் தொலைபேசியை காணவில்லையென தேடியுள்ளார்.

நீண்ட நேரம் தேடியும் கிடைக்காத காரணத்தினால் மனைவிக்கு அழைப்பினை எடுத்து இது தொடர்பில் வினவியுள்ளார்.மனைவியும் கையடக்கத் தொலைபேசியை தான் எடுக்கவில்லையென கூறிய நிலையில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த மாணவி கையடக்கத் தொலைபேசியை தந்தைக்கு தெரியாமல் தரையில் வீசிவிட்டு தனது அறையில் தவறான முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri