காதலிக்கு தகவல் வழங்கி விட்டு மாணவனின் விபரீத முடிவு
ஹொரனை பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
“நான் வாழ்ந்து பலன் இல்லை, நான் சாக போகிறேன்” என தனது காதலிக்கு தொலைபேசிக்கு அழைத்து கூறிய நிலையில் மாணவன் உயிரிழந்துள்ளார்.
படுவிட்ட வடக்கில் உள்ள வீடொன்றில் தற்காலிகமாக தங்கியிருந்து ஹோட்டல் கற்கைநெறியை பயின்று வந்த தினேத் தஷ்மிகா தேவ் ஷி விக்கிரமசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தோழியின் வீட்டில்
உயிரிழந்த இளைஞன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தனது தாயாரின் உற்ற தோழியின் வீட்டில் தங்கியிருந்து சுமார் ஒன்றரை மாதங்கள் புலத்சிங்கல பிரதேசத்திற்கு சென்று கற்கை நெறிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 8ஆம் திகதி வழமை போன்று பாடநெறிக்காக சென்று தனது வீட்டுக்குச் திரும்பிய இளைஞன் அன்று இரவு உறங்கச் சென்றுள்ளார்.
இளைஞனின் சடலம்
மறுநாள் குறித்த இளைஞனை எழுப்ப வீட்டின் உரிமையாளரின் சகோதரி அறைக்குச் சென்றதாகவும் இளைஞனின் சடலம் கட்டில் தொங்குவதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் அன்றைய தினம் இரவு தனது 17 வயது காதலிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நான் வாழ்ந்து பலன் இல்லை, நான் சாக போகிறேன்” என்று கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.