பாடசாலை அதிபரினால் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!
மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதிபர் தாக்கியதில் அந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனிடம் ஏ4 தாளை கொண்டு வருமாறு கூறப்பட்ட போதும் அதனை கொண்டு வராத காரணத்தினால் அதிபர் மாணவனை முதுகில் அடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாடசாலை முடித்து வீடு திரும்பிய மாணவனுக்கு கடும் வாந்திபோக்கு ஏற்பட்டுள்ளது.
அதிபர் கைது
இது குறித்து பெற்றோர் குழந்தையை விசாரித்தபோது, மாணவன் அதிபர் தன்னை தாக்கியதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பெற்றோர் மாணவனை அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், மாணவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், தாக்குதலினை மேற்கொண்டதாக கூறப்படும் அதிபர் நேற்று (16.06.2023) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
