மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த விடுமுறை நாளை மறுதினம்(27.02.2025) வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் பி.ஏ.சி.பி பமுனுஆராச்சி கையொப்பமிட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
பாடசாலைக்கு செல்வதில் சிரமம்
முன்னதாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

குறித்த விடுமுறையை முன்னிட்டு மார்ச் 01 ஆம் திகதி பாடசாலைகள் நடைபெறும்.

நாளை (26) மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதால் நாளை மறுநாள் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பது கருத்திற்கொள்ளப்பட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri