ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
புதிய இணைப்பு
செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை முடிவடையும் நேரத்திற்கு பின்னர் கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எற்ற முறையில் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சுக்கு முறையான கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பாடசாலைகளை பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு உத்தேசித்துள்ள நிலையில், 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் வாக்களிப்பு நிலையங்களை தயார்படுத்தும் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் பாடசாலைகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படக்கூடும் என்பதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஏற்பாடு
இந்நிலையில் பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான (21ஆம் திகதி) அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், (18), (19) மற்றும் 20ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வாரத்தில், மற்றும்16 மற்றும் 17ம் திகதி அரசு விடுமுறை காரணமாக மீதமுள்ள நாள் குறித்து முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு கூறியுள்ளது.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
வாக்களிப்பு நிலையங்கள் பயன்படுத்தல்
இதற்கமைய, வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தயார்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வியமைச்சுடன் கலந்துரையாடி இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |