பாடசாலைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறையில் மாற்றம்
பாடசாலைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (05.10.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உயர்தரப் பரீட்சை தினம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 4 முதல் 31ஆம் திகதி வரையில் பரீட்சை நடக்கவுள்ளது.
விடுமுறை தொடர்பான அறிவிப்பு
இதன்படி யாரேனும் விண்ணப்பிக்க இருந்தால் அவர்களுக்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பரீட்சை தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும். இதேவேளை பாடசாலை விடுமுறை இம்முறை டிசம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படலாம்.
ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். பரீட்சை முடிவடைந்த பின்னர் மற்றைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
