தளர்த்தப்படவுள்ள 67 வகையான வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள்
வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் 67 வகையான வாகனங்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வாரத்தில் இறக்குமதி கட்டுப்பாட்டை மேலும் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டியதன் காரணமாக, சில பொருட்களை இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. சில பொருட்கள் தடை செய்யப்பட்டன.
வணிகத்தை மேற்கொள்வதில் பாதிப்பு
இதனால் குறிப்பாக சுங்கத் திணைக்களத்திற்கு அழுத்தம் ஏற்பட்டதுடன் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் 299 பொருட்களுக்கும், வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் 67 வகையான வாகனங்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
