பாடசாலைகளின் மீள் ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்களம் மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளே நாளை(18) ஆரம்பமாகவுள்ளன.
கல்வி நடவடிக்கைகள்
இந்நிலையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தன.
இதன்படி, 10 நாட்கள் விடுமுறையின் பின்னர் குறித்த பாடசாலைகளின் 3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri