எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கப்படும் விலைகள்! பதில் நிதி அமைச்சர் அறிவிப்பு
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காலணி மற்றும் பைகள் ஆகியனவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் காலணி மற்றும் பைகளுக்கான விலையை 10 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி இடைநிறுத்தம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் டொலர் பற்றாக்குறை காரணமாக பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது.

அந்த வகையில் காலணி மற்றும் பைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதியும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக காலணிகள் மற்றும் பைகளின் விலை இலங்கையில் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri