பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை காரணமான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மேலும், அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும்.
சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது.
சாதாரணத் தரப் பரீட்சை
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
மூவாயிரத்து 527 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
