அதிகரிக்கப்படும் மாணவர்களின் கொடுப்பனவு : ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Ranil Wickremesinghe Sri Lankan Schools Education
By Benat Jan 28, 2024 11:15 AM GMT
Report

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது. 

ஜனாதிபதியாக அனுரகுமார பதவியேற்றதும் நாடாளுமன்றம் கலைக்கப்படும் - வசந்த சமரசிங்க

ஜனாதிபதியாக அனுரகுமார பதவியேற்றதும் நாடாளுமன்றம் கலைக்கப்படும் - வசந்த சமரசிங்க

ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பு

இந்த நிலையில்,  புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிகரிக்கப்படும் மாணவர்களின் கொடுப்பனவு : ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை | Scholarship Allowance Announced

மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள் ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும், கற்கும் திறன் கொண்ட, ஆனால் பொருளாதாரச் சிரமங்களுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் இந்த புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

10 மாதாந்த தவணைகள்

2021/2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் இதுவரை 10 மாதாந்த தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதிகரிக்கப்படும் மாணவர்களின் கொடுப்பனவு : ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை | Scholarship Allowance Announced

இதன்படி, புலமைப்பரிசில் தொகை அதிகரிப்புடன், 2024 பெப்ரவரி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 6,000 ரூபா மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் 2022/2023 ஆண்டு தொடர்பாக க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் தேர்ச்சி பெற்ற 5,000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த மாணவர் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை மாதாந்தம் ரூ. 6000 தொகையை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி, இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் தற்போது பிராந்திய மட்டத்தில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தெரிவுகள் நிறைவடைந்தவுடன் உரிய மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான புதுப்பிக்கப்படும் தகவல்களை எதிர்காலத்தில் அறிந்து கொள்வதற்கு , ஜனாதிபதி நிதியத்தின் www.facebook.com/president.fund என்ற உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை மற்றும் உத்தியோகபூர்வ YouTube சேனலான www.youtube.com/@PresidentsFund ஐ like/follow அல்லது subscribe செய்யுமாறும் www.presidentsfund.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.  

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் : குவிக்கப்பட்டுள்ள பெருமளவு பொலிஸார்

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் : குவிக்கப்பட்டுள்ள பெருமளவு பொலிஸார்

மோசமான கட்டத்தில் இலங்கை: பொய்யான தகவல்களால் மக்களை ஏமாற்றும் அரசு

மோசமான கட்டத்தில் இலங்கை: பொய்யான தகவல்களால் மக்களை ஏமாற்றும் அரசு

என்னை தீர்மானித்தது இந்தியா அல்ல! யாருடனும் இணையத் தயார் - சிறீதரன் அறிவிப்பு

என்னை தீர்மானித்தது இந்தியா அல்ல! யாருடனும் இணையத் தயார் - சிறீதரன் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US