சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் : குவிக்கப்பட்டுள்ள பெருமளவு பொலிஸார்
வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகளுக்காக பெருமளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வடமேற்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களில் இருந்து 380 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார்
கடந்த 25ஆம் திகதியில் இருந்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருமளவான அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலர் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், இவ்வாறு அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்கத்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        