செம்மணி மனித புதைகுழி விவகாரம்: ஸ்கான் பரிசோதனை தாமதம்
மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தை ஸ்கான் பரிசோதனை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்னும் கிடைக்காத காரணத்தால் ஸ்கான் பரிசோதனை தாமதமடைந்துள்ளது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தின் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய இதுவரை மொத்தமாக 32 நாட்கள் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் 104 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஸ்கான் பரிசோதனை
இந்நிலையில் மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயான எல்லையைச் சூழ ஸ்கான் பரிசோதனை மேற்கொள்வதற்கான முதல் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன.

நேற்று திங்கட்கிழமை ஸ்கான் பரிசோதனை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்த்தபோதும் நேற்று மாலை வரை அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் ஸ்கான் பரிசோதனை தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam