ஐக்கிய மக்கள் சக்தியின் ஆா்ப்பாட்டம்! கொழும்பில் வாகனப் போக்குவரத்துக்கள் பாதிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆா்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் காலி வீதி கொள்ளுப்பிட்டியில் வாகன நொிசல் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை பெய்துக்கொண்டிருக்கும் நிலையில் ஹைட்பாா்க் பிரதேசத்தில் நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டம், தற்போது அது மருதானையில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் காரணமாக எதிா்க்கட்சி தலைவா் காாியாலயம் அமைந்துள்ள கொழும்பின் சோ் மாா்க்கஸ் பொ்ணான்டோ வீதி முதல் நெலும் பொக்குன அரங்கம் வரையிலான வீதி மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதி மற்றும் தொடா்புடைய வீதிகளின் வாகனப்போக்குவரத்துக்கள் தடைப்பட்டதாக எமது செய்தியாளா் அறிவிக்கிறாா்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஆா்ப்பாட்டத்தை சுகாதார நடைமுறைகளின்கீழ் மேற்கொள்ள, கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனிய இன்று அனுமதியை வழங்கினாா்.