தமிழ் சமூகம் விடுதலைப் புலிகளின் ஊடாக போரில் ஈடுபட்டபோதும் எதனைக் கண்டது? நாடாளுமன்றில் கேள்வி
சிறுபான்மை பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் இணைந்து தீா்வுகளை பெற்றுகொள்ளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் இஸாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னைய முஸ்லிம் தலைவா்கள், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே சமூகத்துக்கான விடயங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தொிவித்து வந்தனா்.
எனினும் அதனை பின்பற்றாததன் காரணமாகவே இன்று தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டாா்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிரச்சனைகள் இருக்கின்றன. எனினும் அவற்றை தீா்க்க எவரும் முன்வரவில்லை.
இந்தநிலையில் மாடறுப்பு உட்பட்ட பிரச்சனைகளை தீா்ப்பதற்காக பிரதமருடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தமிழ் சமூகம் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடாக பாாிய போாில் ஈடுபட்டபோதும், எதனைக்கண்டது. பலா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
அதேபோன்று சஹ்ரான் முஸ்லிம் சமூகத்தை பழிகொடுத்தமையால், முஸ்லிம் மக்கள் பாாிய பிரச்சனைகளை எதிா்கொண்டனா்.
இந்தநிலையில் வாயினால் வெற்றிலையை நாட்டாமல், யதாா்த்தமாக செயற்படவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினா் இஸாப் ரஹ்மான் குறிப்பிட்டாா்.