சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பல மில்லியன் ரூபா செலவில் அடிக்கல் நாட்டப்பட்ட விபத்து மற்றும் அவரது சிகிச்சை பிரிவுக்கான மூன்று மாடிகளை கொண்ட கட்டடமே இவ்வாறு திறந்த வைக்கப்பட்டது.
வட மாகாண பிரதமர் செயலாளர் எஸ்.எம். சமன்பந்துலசேன இக்கட்டடத்தினை திறந்து வைத்ததுடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சி.குமரவேள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




