கனேடிய கடவுச்சீட்டு மோசடி! கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்
போலி கனேடிய கடவுச்சீட்டில் இலங்கைக்குள் பிரவேசித்து இங்கிலாந்துக்கு தப்பிச்செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கத்தாரின் தோஹாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சவூதி அரேபியாவில் அரபு மொழி கற்பிக்கும் 31 வயதான சாடியன் ஆசிரியர் என்றும் தெரியவந்துள்ளது.
இவர் கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-654 மூலம் கத்தாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதனையடுத்து இவர் தனது கனேடிய கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை குடிவரவு அனுமதிக்காக கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள குடிவரவு அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
நாடு கடத்தல்
இதன்போது கடவுச்சீட்டு தரமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரியினால் கண்டறியப்பட்டு ஆவணங்கள் குடிவரவு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபர் தான் சாடியன் என்றும், தனக்காக கடவுச்சீட்டை தனது சகோதரர் தயாரித்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு வந்து 05 நாட்களின் பின்னர் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சவூதி அரேபிய பிரஜையை கைது செய்த குடிவரவு அதிகாரிகள் அவரை கத்தாரின் தோஹாவிற்கு நாடு கடத்துவதற்காக கட்டார் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
You My Like This Video





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
