ஒரே நாளில் 8 பேரை தூக்கிலிட்ட சவூதி அரேபியா
சவூதி அரேபியாவில் இன்று(03) ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்கள் தொடர்பிலேயே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்களுக்கு
சவூதி அரேபியா 2022ஆம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தியது.
இதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு இத்தகைய குற்றங்களுக்கு மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று நான்கு சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
அதேநேரம் தமது தாயை கொலை செய்த சவூதி பொதுமகனும் இன்று தூக்கிலிடப்பட்டார்.
இதன்படி 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து சவூதி அரேபியாவில் 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 15 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
