அனோஜனை விடுதலை செய்யக் கோரி யாழில் நாளை மெழுகுவர்த்திப் போராட்டம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி, நாளை (21) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்திப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெழுகுவர்த்திப் போராட்டம்
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த மெழுகுவர்த்திப் போராட்டத்தில் கலந்துகொண்டு அனோஜனுக்கான ஆதரவை வெளிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
