உம்ரா வழிபாட்டை மேற்கொள்ள சவூதி விடுத்துள்ள அறிவிப்பு
சவூதி அரேபியாவில் இருக்கும் அனைத்து வகையான விசாக்களை (தனிப்பட்ட, குடும்ப வருகை, சுற்றுலா, போக்குவரத்து, பணி விசாக்கள் உட்பட) வைத்திருப்பவர்களும் இப்போது உம்ரா வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
'சவூதி விஷன் 2030' திட்டத்தின் ஒரு பகுதியாக, உம்ரா பயணிகளுக்கான நடைமுறைகளை எளிதாக்குவதும், அதிகபட்ச வசதிகளை வழங்குவதுமே இதன் முக்கிய இலக்காகும்.
உம்ரா வழிபாடு
உம்ரா செய்ய விரும்புவோர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'நுசுக் உம்ரா' (Nusuk Umrah) டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தி, தங்களுக்குப் பொருத்தமான தொகுப்பைத் தேர்ந்தெடுத்து, தங்கள் உம்ரா அனுமதிகளை இலத்திரனியல் முறையில் எளிதாகப் பெறலாம்.

இந்த நடவடிக்கை, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சிரமமின்றி புனித யாத்திரையை மேற்கொள்ள சவூதி அரசு வழங்கும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துகிறது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri