தமிழ்வின் தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் செயல்!

By Independent Writer Apr 23, 2024 09:10 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழ். போதனா வைத்தியசாலையின் அசமந்தப் போக்குகளை செய்தியாக வெளியிட்டு தனது ஊடகக் கடமையைச் செய்த ‘தமிழ்வின்’ இணையத்தளத்தை ‘நிராகரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி.

விபத்து ஒன்றில் கொல்லப்பட்ட நபரின் உடலத்தை பிரேத பரிசோதனை செய்யாமல் உறவினர்களிடம் ஒப்படைத்திருந்த வைத்தியசாலை நிர்வாகம்,  மரணச் சடங்குகள் செய்துகொண்டிருக்கும் போது மீண்டும் உடலத்தை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட விடயத்தை தமிழ்வின் இணையத்தளம் செய்தியாக்கியிருந்தது.

அந்தச் செய்தி தொடர்பாகவே பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகத்தில் தனது காழ்ப்புணர்வை வெளியிட்டிருந்தார்.


இலவச சேவை சிதைக்கப்படுவதனை நோக்காகக் கொண்ட செய்தி என்றும், 'தமிழ்வின்' இணையத் தளத்தை உள்ளூரிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்திருந்தார்.

வைத்திய அதிகாரி அவர்களின் குற்றச்சாட்டை தமிழ்வின் இணையத்தளம் முழுவதுமாகவே மறுப்பதுடன், 'தமிழ்வின்' இணையத்தளத்தில் வெளியான செய்தியின் உண்மைத்தன்மையை மறுபடியும் மறுபடியும் உறுதிப்படுத்துகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலை என்பது மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் செயற்படுகின்றது என்பதையும், அங்கு பணியாற்றும் வைத்திய அதிகாரிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றுகின்றார்கள் என்பதையும் எமது ஊடகம் எந்த இடத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.

ஆனால் தவறுகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் அந்தத் தவறுகளைச் சுட்டிக்காண்பிப்பது என்பது ஒரு ஊடகத்தின் தார்மீகக் கடமை என்பதன் அடிப்படையில்தான் நாம் செய்திகளை வெளியிட்டுவருகின்றோம்.

சத்தியமூர்த்திபோன்ற சில அதிகாரிகளின் நிலைப்பாடு என்னவென்றால், தவறுகள் நடக்கும், ஆனால் நீங்கள் யாரும் அதுபற்றிப் பேசக்கூடாது என்பதாக அமைகின்றது. 

ஊடகங்கள் ஒரு அரசாங்க அதிகாரி நினைப்பது போன்று செயற்படமுடியாது. அப்படிச் செய்தால் அது ஊடக தர்மமும் அல்ல.

யாழ். போதனா வைத்தியசாலையில் மலிந்துகிடக்கின்ற ஊழல்கள்,  எதேச்சதிகாரம், நிர்வாகச் சீர்கேடுகள் பற்றி நாளாந்தம் நிறையக் குற்றச்சாட்டுக்கள் எமது ஊடகங்களுக்கு வந்தபடிதான் இருக்கின்றன. அவற்றில் சரியான ஆதாரங்கள் உள்ள செய்திகளை மாத்திரம்தான் நாங்கள் வெளியிட்டு வருகின்றோம்.

குறிப்பிட்ட இந்தச் செய்தி தொடர்பாக காவல்துறை முதல் சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரிகள், ஊழியர்கள், உறவினர்கள் என்று அனைவரினதும் சாட்சியங்களை ஒலிப்பதிவு செய்துவிட்டுத்தான், எமது ஊடகம் செய்தியை வெளியிட்டிருந்தது என்பதை மறுபடியும்  இந்தச் சந்தர்ப்பத்தில்  உறுதிப்படுத்துகின்றோம்.

மக்கள் நலன்சார்ந்து செய்தி வெளியிடுகின்ற ஊடகங்களின் வாய்களை அடைப்பதில் நேரத்தைச் செலவழிக்கின்ற பணிப்பாளர் சத்தியமூர்த்தி, தனது நிர்வாகத்தின் கீழ் நடைபெறுகின்ற சீர்கேடுகள் விடயத்தில் கொஞ்சமாவது அக்கறை காண்பிக்கவேண்டும் என்று மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

'தமிழ்வின்' இணையத்தளம் என்பது இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக தமிழ் மக்களின் வாழ்வின் அசைக்கமுடியாத பிரதிபலிப்பாக இருந்துவருகின்ற ஒரு ஊடகம்.

எத்தனையோ நெருக்கடியான காலகட்டங்களில் தனது வரலாற்றுக் கடமைகளைச் செய்து மக்களால் அதிகம் நேசிக்கப்படுகின்ற ஊடகங்கள் வரிசையில் முதலிடம் வகித்துவருகின்ற ஒரு ஊடகம்.

தமிழ் ஊடகங்கள் மீது இரும்புக்கரம்கொண்ட அடக்குமுறைகள் நிகழ்ந்த காலங்களிலேயே, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பயணம் செய்த வரலாறு தமிழ்வின் இணையத்தளத்துக்கு இருக்கின்றது.

கருணா, பிள்ளையான், சஹரான் குழு உறுப்பினர்கள், பாதாள உலகக் கும்பல்கள் என்று தமிழின எதிரிகள் பல சந்தர்ப்பங்களில் தமிழ்வின்னை நிராகரிக்கவேண்டும் என்று வேண்டுகோள்கள் முன்வைத்திருக்கின்றார்கள்.

அந்த வரிசையில் சத்தியமூர்த்திபோன்றவர்களும் இணைந்துகொண்டுள்ளது ஆச்சரியம் அளிக்கின்றது. 

யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில் நடந்த குற்றச்செயல்கள்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அசமந்தம்: இறுதிச் சடங்கில் ஏற்பட்ட குழப்பம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அசமந்தம்: இறுதிச் சடங்கில் ஏற்பட்ட குழப்பம்

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு

போராட்டத்தால் தடுக்கப்பட்ட வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும் செயற்பாடு

போராட்டத்தால் தடுக்கப்பட்ட வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும் செயற்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையில் திருப்பியனுப்பப்படும் கிளினிக் நோயாளர்கள்

யாழ். போதனா வைத்தியசாலையில் திருப்பியனுப்பப்படும் கிளினிக் நோயாளர்கள்

யாழ் போதான வைத்தியசாலையில் குழந்தைகள் இறப்பு தொடர்பில் வெளியான தகவல்

யாழ் போதான வைத்தியசாலையில் குழந்தைகள் இறப்பு தொடர்பில் வெளியான தகவல்

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்


Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US