யாழ் போதான வைத்தியசாலையில் குழந்தைகள் இறப்பு தொடர்பில் வெளியான தகவல்
யாழ்.போதனா வைத்திசாலையில் கடந்த ஆண்டு 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்.போதனா வைத்திசாலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 5,510 குழந்தைகள் பிறந்துள்ளன.

அவற்றில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 1052 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்களில் 238 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாள் வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri