பல வருட உழைப்புக்கு கிடைத்துள்ள பலன்: உயர் பாராட்டு பெற்ற சரிட்டா நகையக உரிமையாளர் பெருமிதம்

Colombo Sri Lanka Gold
By Benat Nov 09, 2023 10:35 AM GMT
Report

இலங்கையில் சிறந்த முன்னணி நகை உற்பத்தியாளர்களில் ஒன்றான Sarrita Jewellery, இரத்தினங்கள் மற்றும் நகைத் துறையில் 'உலகளாவிய அடையாளமாக' இந்தியாவினால்(GJEPC)பாராட்டப்பட்டதாக குறித்த நகையகத்தின் உரிமையாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலால் சமீபத்தில் தங்களது நகையகத்திற்கு இது தொடர்பான பாராட்டு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள இன்டர்காண்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சியின் மூன்றாவது பதிப்பில் இந்த பாராட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்கிரமடையும் காசா போர்க்களம்....! மருத்துவமனை மீது மீண்டும் இஸ்ரேல் விமானத் தாக்குதல்

உக்கிரமடையும் காசா போர்க்களம்....! மருத்துவமனை மீது மீண்டும் இஸ்ரேல் விமானத் தாக்குதல்

இதில் 50க்கும் மேற்பட்ட இந்திய இரத்தினங்கள் மற்றும் நகைகள் தொடர்பான தொழிலதிபர்கள் மற்றும் 300 சர்வதேச வர்த்தகர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நம்பிக்கையுடைய சேவை 

1980களின் நடுப்பகுதியில் இரத்தினங்கள் மற்றும் நகைத் துறையில் தான் நுழைந்ததாகவும், பி.முருகேசு என்பவருடன் இணைந்து 2004ஆம் ஆண்டு சரிட்டா என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததாகவும் அதன் உரிமையாளர் சுப்ரமணியம் மேலும் தெரிவித்துள்ளார்.

பல வருட உழைப்புக்கு கிடைத்துள்ள பலன்: உயர் பாராட்டு பெற்ற சரிட்டா நகையக உரிமையாளர் பெருமிதம் | Sarritta Jewellery Colombo

தங்களது நகையகம் மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பில் ஆர்.சுப்ரமணியம் மேலும் குறிப்பிடுகையில், சரிட்டா நகையகம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து, அதன் வேர்கள் தொழில்துறையில் உண்மையாகப் பதிந்துள்ளன, ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரத்துடன் சேவையை வழங்கி வருகின்றது என தெரிவித்தார்.

மேலும், சரிட்டாவின் தயாரிப்புகளில் வளையல்கள், காதணிகள், நெக்லஸ்கள், மோதிரங்கள், தங்க நாணயங்கள் மற்றும் ரோஜா, வெள்ளை, மஞ்சள் தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள் அடங்கும்.

பல வருட உழைப்புக்கு கிடைத்துள்ள பலன்: உயர் பாராட்டு பெற்ற சரிட்டா நகையக உரிமையாளர் பெருமிதம் | Sarritta Jewellery Colombo

திருமணப் பட்டைகள், திருமண நெக்லஸ்கள், நிச்சயதார்த்த மோதிரங்கள் மற்றும், திருமண சேகரிப்பின் கீழ் வரும் மோதிரங்கள் மற்றும் பரந்த அளவிலான சர்வதேச மற்றும் தனிப்பயன் நகைகளும் கிடைக்கப்பெறுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வாடிக்கையாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மற்றும் அர்ப்பணிப்புள்ள சேமிப்புடன் எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்கு உத்தரவாதமான சேவையை சரிட்டா வழங்குகிறது.

இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

  

அவர்கள் அனைவருக்கும் சிறந்த தரமான நம்பிக்கையுடைய சேவையை செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியாகும், மேலும் அந்த நோக்கத்திற்காக எங்கள் அர்ப்பணிப்பு தொழில்துறையை கணிசமாக வளப்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக எங்களின் அயராத முயற்சிகள், அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமை ஆகியவை கவனிக்கப்படாமல் போகவில்லை என்பதை இந்த பாராட்டு நமக்கு உணர்த்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.   

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US