இரட்டை கொலையில் வழக்கில் சர்பயா குற்றமற்றவர்! விடுவித்தது இலங்கையின் மேல் நீதிமன்றம்!
குற்றமற்றவர்
1999ஆம் ஆண்டு இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஹசித சமந்த முஹந்திரம் என்றழைக்கப்படும் சர்பயாவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ரஞ்சித் நந்தசேன மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரை 1999 ஆம் ஆண்டு கலவானாவில் வைத்து சுட்டுக் கொன்றதாக முன்னாள் அரசியல்வாதி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பொலிஸார் மீது குற்றச்சாட்டு
இந்தநிலையில் சர்பயா என அழைக்கப்படும் ஹசித சமந்த முஹந்திரம் என்பவரை குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்வதற்கான உத்தரவு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் வழங்கப்பட்டது.
பொலிஸார் அலட்சியமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், நீதிமன்ற மருத்துவ சான்றுகள் உள்ளிட்ட சாட்சியங்களில் நம்பகத்தன்மை இல்லை எனவும் நீதிபதி, தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தண்டனை வழங்கவே நீதிமன்றங்கள் இருக்கின்றன:பொலிஸாரை கடுமையாக சாடிய நீதவான்
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam