பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக அமைச்சர் சரோஜா சாவித்ரி தெரிவு
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் கூடிய போதே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
பிரதி இணைத் தலைவர்களாக இருவர்
இவருடைய பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன வழிமொழிந்தார்.
அத்துடன், பெண் நாடாளுன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக இருவர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி பண்டார கிரிஎல்லே பிரதி இணைத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், மற்றுமொரு பிரதி இணைத்தலைவராகப் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
இதில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, நாடாளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |