பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள சாவித்திரி போல்ராஜின் லண்டன் உரை
தமிழ் மக்கள் கடந்த அரசாங்கங்களின் காலங்களில் பயத்துடன் வாழ்ந்ததாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் லண்டனுக்கு சென்றிருந்த போது தெரிவித்த கருத்துக்கு முப்படைகள் மற்றும் பொலிஸாரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து கூறிய அவர்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், தமிழ் மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதற்கு பயந்தனர். மேலும் இராணுவத்தினர் அச்சுறுத்துவார்கள் என்ற அச்சம் கொண்டனர்.
தேசிய மக்கள் சக்தி
அத்தோடு தமிழ் மக்கள் இந்நாட்டு பிரஜைகளா என்ற சந்தேகமும் இருந்தது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்நிலைமை இன்றில்லை என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்திருந்தார்.
அவர் மாத்தறையில் சிங்கள மக்களின் வாக்குகளிலேயே வெற்றி பெற்று லண்டனுக்கு சென்று இப்படி பேசுகிறார்.
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் பல்லாயிரம் கணக்கான பொது மக்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளனர்.அந்த இராணுவத்தையா அமைச்சர் இவ்வாறு பேசினார். நீங்கள், எமது மக்கள் என கூறிக்கொள்ளும் வடக்கு மக்களுக்கு என்ன செய்துள்ளீர்கள்.
வடக்கு மக்களுக்கு என்ன செய்தீர்கள்
யுத்தம் நடைபெற்ற போது இராணுவம் மீட்டெடுத்த மக்களுக்கு ஒரு யோகற்றாவது கொடுத்தீர்களா? அல்லது இராணுவத்தினர் அமைத்த வீட்டுக்கு ஒரு கூரைத் தகடாவது வாங்கி கொடுத்துள்ளாரா?

எமது இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? சிங்கள மக்களின் வாக்குகளில் நாடாளும்னறம் சென்று தமிழ் மக்கள் தொடர்பில் கதைக்க என்ன அருகதை இருக்கிறது.
இவ்வாறான கருத்து பாரிய கண்டனத்திற்கு உரியதும் இழிவுப்படுத்தும் செயற்பாடாகும்” எனக் கூறியுள்ளார்.
அயல்நாடுகளில் குண்டுகள் வெடித்தாலும் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லையாம்..! நாடாளுமன்றில் ஆனந்த விஜேபால
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri