இலங்கையில் பிறப்பு சான்றிதழில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம் - வெளியான தகவல்
குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படுமென அரச நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் விநியோகத்தை நெறிப்படுத்தும் நோக்கில் அஞ்சல் துறையுடன் இணைந்து தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயல்முறை
அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்மூலம் எதிர்காலத்தில் அந்த குழந்தை பெறும் தேசிய அடையாள அட்டை எண்ணை பிறப்புச் சான்றிதழில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தால் வழங்க திட்டமிடப்பட்டுள்ள டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் செயல்பாட்டில் மூன்றாம் தரப்பினர் தகவல்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காத்தான்குடியில் முன்னாள் ஆயுததாரியால் தமிழ்பேசும் பௌத்த துறவிக்கு நேர்ந்த கதி! அம்பலமாகும் ஆதாரங்கள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri