அயல்நாடுகளில் குண்டுகள் வெடித்தாலும் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லையாம்..! நாடாளுமன்றில் ஆனந்த விஜேபால
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்திருந்தாலும் அந்தச் சம்பவங்களால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உளவுத்துறை
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாட்டில் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் பாதுகாப்புப் பிரச்சினை இல்லை.

இலங்கைக்கு இது போன்ற அச்சுறுத்தல் இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை.
இலங்கையின் உளவுத்துறை தீவிரமாக உள்ளது. நமது பாதுகாப்புத்துறை, குறிப்பாக ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸ் பிரிவு, தேசிய பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றன.
எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எந்தக் கேள்வியும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
காத்தான்குடியில் முன்னாள் ஆயுததாரியால் தமிழ்பேசும் பௌத்த துறவிக்கு நேர்ந்த கதி! அம்பலமாகும் ஆதாரங்கள்
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam