இங்கிலாந்தில் இன்னும் பறக்கும் விடுதலைப் புலிகளின் தேசிய கொடி : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர
இங்கிலாந்தில் இன்னும் விடுதலைப் புலிகளின் தேசிய கொடி பரப்பதாகவும் அதை நிறுத்துவதற்கு இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (12.11.2025) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
இங்கிலாந்தில் வளர்ச்சி பெற்ற புலிகள்
இங்கிலாந்து தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைமையகம் இங்கிலாந்திலேயே அமைந்துள்ளது.
மேலும் விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரான அன்டன் பாலசிங்கம் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருந்தவர். கரன்னாகொட, சவேந்திர சில்வா, ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கும் வீசா வழங்கவும் இங்கிலாந்து மறுத்தது.
பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்களை இலங்கிலாந்துதான் போசிக்கிறது. அவர்களின் வாக்கு வங்கியின் பலத்தால் இவ்வாறு செய்கிறது.
அன்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடல் பாலசிங்கமே தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கி சயணைற் குப்பியை கழுத்தில் மாட்டிக்கொள்ள உதவி செய்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
அயல்நாடுகளில் குண்டுகள் வெடித்தாலும் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லையாம்..! நாடாளுமன்றில் ஆனந்த விஜேபால
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam