வடக்கில் “காட்டிக்கொடுக்கும் அரசியல்” செய்யக் கூடாது! அநுரவை எச்சரிக்கும் சரத் வீரசேகர
சிங்கள - பௌத்த வாக்குகளால் பதவிக்கு வந்துவிட்டு வடக்குக்குச் சென்று அவர்களைக் காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செயற்படக்கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்றையதினம்(21) ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
திஸ்ஸ விகாரை
"ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தோல்வி அடைந்தார்.

நாடு முழுதும் 42 சதவீத வாக்குகளே அவருக்குப் கிடைக்கப்பெற்றன. இதில் பெரும்பாலான விகிதம் சிங்கள, பௌத்த வாக்குகளாகும்.
எனவே, சிங்கள, பௌத்த வாக்குகளில் பதவிக்குவந்துவிட்டு வடக்குக்குச் சென்று சிங்கள, பௌத்த மக்களை காட்டிக்கொடுக்கும் செயலில் ஈடுபடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. திஸ்ஸ விகாரை என்பது புராதான விகாரை என்பது ஏற்கப்பட்டுள்ளது.
இதற்குரிய காணி உரித்தும் உள்ளது. ஜனாதிபதியின் அறிவிப்பானது சிறீதரன், கஜேந்திரகுமார் போன்ற தரப்புக்கு மேலும் உந்து சக்தியாக அமையும் என்றார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri