தமிழ் மக்களை தலை குனிய வைக்கும் தமிழ்க் கட்சி! கடுமையாக சாடிய சந்திரசேகர் எம்.பி
தமிழ் மக்களை தலை குனிய வைக்கும் விதத்திலேயே தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரீகமற்ற கருத்துக்களை விதைக்கின்றார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் பிரதான உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் (21.01.2026)பிற்பகல் நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்கள்
அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் தலைகுனியும் விதத்திலேயே நாகரீகமற்ற கருத்துக்களை விதைக்கின்றார்கள் இது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தலை குனிய வைக்கின்ற ஒரு கருத்துக்களாகவே காணப்படுகின்றன.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் அல்லது அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களையோ ஆதரவாளர்களையோ விமர்சிப்பதை தவிர அவர்கள் வேறு எதனையும் செய்யவில்லை இப்போது பரந்தன் இராசயன தொழிற்சாலையை உருவாக்குவதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறன.
வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ளுகின்ற போது இங்குள்ள ஒரு சில அரசியல்வாதிகள் சென்று வழக்கு தாக்கல் செய்கின்றார்கள் எங்களுக்கு துறைமுகங்கள் வேண்டாம் அபிவிருத்திகள் வேண்டாம் விளையாட்டு மைதானங்கள் வேண்டாம் யாழ் குடாநாடு எப்படி நாசமாக போனாலும் பரவாயில்லை நான் கொழும்பில் சுதந்திரமாக வாழ்கின்றேன்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வு
அந்தத் தொணியிலே அவர்கள் செயற்படுகின்றார்கள் எதிர்காலத்தில் மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் வடமாகான ஆளுனர் மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரன் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் துறைசார் திணைக்கள பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

1956ம் ஆண்டு முதல் 1985 ஆண்டு வரை செயல்பட்ட தொழிற்சாலை, இப்போது கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் புனரமைப்பு பணிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையின் மறுமலர்ச்சி, பிராந்தியத்தில் தொழில்துறை நடவடிக்கைகளை மீட்டெடுப்பதிலும், இலங்கையின் உள்நாட்டு இரசாயன உற்பத்தி திறனை வலுப்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்து நிற்கின்றது.

காஸ்டிக் சோடா மற்றும் குளோரின் உற்பத்தி அலகுகளை மறுகட்டமைப்பதற்கான ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, பரந்தன் கெமிக்கல்ஸ் லிமிடெட், வளர்ந்து வரும் உள்ளூர் சந்தை தேவையை பூர்த்தி செய்ய பாலி அலுமினியம் குளோரைடு மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி வசதிகளை நிறுவ திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam