அரசியல் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கவுள்ள சரத் பொன்சேகா
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தனது அரசியல் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
தற்போது தனது அரசியல் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஆழமான பிளவில் சிக்கியுள்ள பொன்சேகா, பதவிகளை மனதில் கொண்டு எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மே தினக் கூட்டங்கள் பண விரயம்
நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ இருப்பதில் எனக்கு விருப்பமில்லை எனவும் நாடும் மக்களும் தான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நாட்டில் நடைபெற்ற மே தினக் கூட்டங்கள் பண விரயம் என பொன்சேகா விமர்சித்துள்ளார். பேரணிகளுக்கு பெரும்பாலான மக்கள் வாடகை பேருந்துகளில் அழைத்து வரப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
You may like this

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
