ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயார் : சஜித் சூளுரை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் என்னை எதிர்த்துப்
போட்டியிட்டாலும் எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
"நாட்டு மக்கள் என் பக்கம் நிற்கும் போது வேட்பாளர்களைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.
மக்களின் அங்கீகாரம்
சகல வேட்பாளர்களுடன் பகிரங்க விவாதம் நடத்தவும் நான் தயார்.
அதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் பெருவாரியான அங்கீகாரம் எனக்குக் கிடைக்கும்.
மேலும், நான் ஊழல் மோசடிகளைச் செய்யவில்லை. கொலைகளைச் செய்யவில்லை.
எப்போதும் மக்களுக்காகவும், நீதிக்காகவுமே குரல் கொடுத்து வருகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
