சாரா ஜெஸ்மினின் மரபணுவை மாற்ற முயற்சித்த சரத்வீரசேகர! பரபரப்பாகும் தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்து விட்டதாக இரு சந்தர்ப்பங்களில் மரபணு பரிசோதனை (DNA) செய்து சாரா ஜெஸ்மினின் மரபணுவுடன் ஒத்து போவதாக தெரியப்படுத்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் இணையத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்க
அதன் தலைவர் அஜித் தர்மபால இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, கொவிட் தொற்று ஏற்பாட்ட காலத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்கத்தை கொண்டு DNAவை மாற்ற முயற்சித்துள்ளார்.
'சரத் வீரசேகரவால் எனக்கு கடும் அழுத்தமாக இருக்கிறது. DNAவை மாற்றுமாறு என்னை வதைக்கிறார்' என்று பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்க என்னிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன் பின்னர் நான் சொன்னேன்,பயப்பட வேண்டாம்! 'இல்லை சீப்' நான் கொடுக்க மாட்டேன் என கூறினார்.ஆனால் சரத் வீரசேகர அவ்வளவு சொல்லியும் அவர் கொடுக்கவில்லை.
அதன் பின்னர் வீரசிங்க மரணமடைந்து விட்டார்.அவர் ஏன் மரணமடைந்தார் என இன்று ஒன்றும் தேட முடியாது.அவர் கொவிட் காலத்தில் இறந்ததால் தகனம் செய்து விட்டார்கள். இன்று ஒன்றும் தேட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri