இந்தியத் தூதுவர் - சஜித் இடையில் முக்கிய கலந்துரையாடல்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
கொழும்பில் அமைந்துள்ள இந்தியன் இல்லத்தில் நேற்று(12.5.2025) மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்புகளைப் பேணுவதில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
இருதரப்பு உறவுகள்
இதன்போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையின் தற்போதைய சமகால அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் அண்மைக்கால அரசியல் சூழல்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
சமகால அரசியல்
இந்தச் சந்திப்பு குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள் மற்றும் சமகால அரசியல் குறித்து ஆக்கபூர்வமாகக் கலந்துரையாடப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening