AI மகிந்த ராஜபக்ச ! பேசு பொருளான முகநூல் பிரசாரம்
மகிந்த ராஜபக்சவின் காம்பீரம் மற்றும் தோற்றம் இன்னும் குறைவில்லையென காட்ட மொட்டுக் கட்சியின் பிரசார குழு பாரிய முயற்சிகளை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது.
மகிந்தவின் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படத்தை காரணம் காட்டி மகிந்தவுக்கு எதிரான அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறித்த படம் AI தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டதாகவும் அதில் அவர் இளமை தோற்றத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! சிக்கிய போலி ஆவணங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
இளமை தோற்றத்தை கொண்ட முகநூல் புகைப்படம்
எண்பது வயதை கடந்துள்ள மகிந்தவுக்கு எழுந்து நிற்க கூட முடியாத நிலையில் நான்கு பேர் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும்.
ஆனால் மகிந்த ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று செவ்வாய்க்கிழமை சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவரின் முகநூல் பக்கத்தில் அவர் தனியாக வாகனத்தில் தொங்கியவாறு கூடியிருந்த மக்களை பார்க்கும் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த படத்துடன் ஒரு பதிவும் இடப்பட்டுள்ளது, 'மக்களின் ஆதரவை தவிர ஒருவரை மகிழ்ச்சிப்படுத்தும் விடயம் அரசியலில் வேறு எதுவுமில்லை.
தனது தாய்நாட்டிற்கு துரோகம் இழைக்காமை போன்றதொரு மகிழ்ச்சி இந்த மண்ணில் பிறந்த ஒரு மனிதனுக்கு வேறில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவர்கள் எனது மக்கள். மகிந்தவின் மக்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.' ஏன பதிவிடப்பட்டிருந்தது.
மக்களின் ஆதரவு தனக்கு இன்றும் குறையவில்லை என்பதை காட்டி தனது மகனை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதே தந்தையான மகிந்தவின் சிந்தனையாக இருக்கிறது.
மேலும் மகிந்தவின் சகபாடிகளும் எப்படியாவது மகிந்தவை வைத்து நாமலின் வெற்றியை கைப்பற்ற முயற்சிப்பதாகவே தெரிகிறது. இந்த பதிவுகள் மகிந்த ராஜபக்ச பதிவிடுவதில்லை.அவரின் பிரசாரக் குழுவே இச்செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.