சாந்த பண்டாரவை விலக்கினால் பேச்சுக்கு தயார்- கோட்டாவைக் கோரும் எதிர்ப்பாளர்கள்
ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரரவை பதவியில் இருந்து நீக்கினால், பேச்சுவார்த்தைக்கு வரத்தயார் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்க்கும் வகையில் ஏற்கனவே அரசாங்கத்தில் இருந்து கொண்டு சுயாதீனமாக இயங்குவதாக கூறும் தரப்பினர் கடந்த வாரம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினர்.
இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தரப்பினர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, அனுர பிரியதர்சன ஆகியோரின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
எனினும் அதில் உடன்பாடு ஒன்று எட்டப்படவில்லை.
இந்தநிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்து கொண்டு சுயாதீனமாக இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த சாந்த பண்டாரவை ஜனாதிபதி ராஜாங்க அமைச்சராக நியமித்தார்.
இதனையடுத்து அரசியல் நெருக்கடி தீர்வுக்கான ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்லப்போவதில்லை என்று அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளும் நேற்று அறிவித்திருந்தன.
இந்தநிலையிலேயே சாந்த பண்டாரவை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், பேச்சுவார்த்தைக்கு தயார் என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்
எனினும் இதற்கு அரசாங்கத்தின் தரப்பில் இருந்து பதில் எதுவும் வெளியாகவில்லை.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
