புதிய இராஜாங்க அமைச்சர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேற்றம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவை கட்சியில் அவர் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு, அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக அமரத் தீர்மானித்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாந்த பண்டார நேற்று கரிம உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
சசீந்திர ராஜபக்சவின் பதவி விலகலை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
