சந்நிதியான் ஆச்சிரமத்தால் நடாத்தப்பட்ட அருணகிரிநாதர் குருபூசைப் பெரு விழா
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முருக பக்தர் அருணகிரி நாதருடைய குரு பூசைப் பெருவிழா சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது நேற்று (22.06.2024) இடம்பெற்றுள்ளது.
இதில், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், அடியவர்கள், அறநெறி பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிதி வழங்கி வைப்பு
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்திற்கு கடந்த 19ஆம் திகதி அன்று பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக நாலாம் கட்டமாக ரூபா 250,000 நிதியும், வழங்கப்பட்டது.
மேலும், இதுவரை 750000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |