விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருடனான புகைப்படம்: பெரும் சர்ச்சையில் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை ''எடிட் செய்து கொடுத்ததே நான்தான்'' என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில், சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீமான்,
15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
புகைப்படம் போலி
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள்” என்று சீமான் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்-சீமான் சந்திப்பு படம் எடிட் செய்யப்பட்டதற்கு என்ன ஆதாரம் உள்ளது என சீமான் கேட்டுள்ளார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள சங்ககிரி ராஜ்குமார்,
“இருவரது சந்திப்பு படம், எடிட் செய்யப்பட்டது. அதுவே ஒரு ஆதாரமாகத்தான் எடுத்துக்காட்டுகிறோம்.
அதற்கு ஒரு ஆதாரத்தை எங்கிருந்து எடுத்துக்காட்டுவது. ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா? இந்த புகைப்படத்தை எவ்வாறு எடிட் செய்தான் என ஆதாரம் காண்பிக்க சொல்கிறார் சீமான்.
ஒலிப்பபதிவை வெளியிடுங்கள்
உலகம் முழுவதும் புகைப்படம் எப்படி எடிட் செய்யப்படுகிறது என்பதை காண்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நண்பர் செங்கோட்டையனை இதுபற்றி ஏன் பேசவிடாமல் தடுத்துள்ளனர். அவருடன் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.
அந்த ஒலிப்பபதிவை வெளியிடட்டும். நான் என்ன பேசினேன் என்பது தெரிந்து விடும்” என பதில் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், இன்று(24.01.2025) கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருக்கு இரத்த உறவு கிடையாது. இலட்சிய உறவு தான். அந்த இலட்சிய உறவு என்று பார்த்தால் இந்த மண்ணில் முதல் சொந்தக்காரன் அவருக்காக போராடி இறந்தவர்.
இரத்த உறவு
இப்போது அவரது இலட்சியத்துக்காக நிற்கின்ற நாங்கள் எல்லாம் தான் அவரது இரத்த உறவு.
கார்த்திக் மனோகர் சொல்வதற்கு பதில் நான் சொல்ல வேண்டியதில்லை. உலகெங்கும் இருக்கிற என்னுடைய சொந்தங்கள் சொல்லிவிடுவார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை சந்தித்தமை குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டும். எனக்கு அவசியம் இல்லை” என்றார்.
இந்நிலையில், புகைப்படம் இருந்த சேமிப்பகத்தை(Hard disk) வாங்கி கொடுத்ததே நான்தான் என்று திமுக மாணவரணித் தலைவர் கூறியமை மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |