தமிழினம் கடந்த பாதையும்... கடக்க வேண்டிய பாதையும்....

Tamils TNA Sri Lanka Sri Lankan Peoples India
By T.Thibaharan Jan 24, 2025 02:46 PM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

""வரலாறு இடைவெளிகளை நிரப்பாமல் விட்டது கிடையாது"" இலங்கை தீவுக்குள் ஈழத் தமிழினம் தனது இறைமையை இழந்து 400 ஆண்டுகள் கடக்கின்ற போதும் அதனுடைய தலைமைத்துவ இடைவெளிகள் அவ்வப்போது நல்லதோ, கெட்டதோ, திறமையோ, திறமையின்மையோ வரும் பொம்மைகளோ ஏதோ ஒன்றினால் இடைவெளிகள் நிரப்பப்பட்டிருக்கின்றது.

தமிழினம் நெருக்கடிகளை சந்திக்கின்ற போதெல்லாம் தமிழினத்தின் அறிவார்ந்தோர் நெருக்கடிகளைகடப்பதற்கான வழியைக் காட்டி இருக்கின்றனர். இந்த வரலாற்றுப் போக்கில் இன்று ஈழத் தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியை கடப்பதற்கான மார்க்கங்களையும், வழிகளையும் அறிவார்ந்தோரும், ஊடகங்களும் கண்டறிந்து மக்களை வழிநடத்த வேண்டியது அவசியமாகிறது.

1621இல் அந்நியரிடம் தமிழர்களுடைய இறைமை பறிபோய் ஏறத்தாழ 200 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் 1833 உருவாக்கப்பட்ட கோல்ட் புரூக் அரசியல் யாப்பினுாடாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டப்பேரவையில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதியாக ஆறுமுகம் பிள்ளை குமாரசாமி 30மே 1835ல் நியமனம் பெற்றார்.

இவரே முதலாவது தமிழ்அரசியல் பிரதிநிதியாக காலனித்துவ ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்டார். இவர்களின் குடும்பத்தினரே தொடர்ந்து சுமார் 100 ஆண்டுகளாக சேர்.பொன்.இராமநாதன் வரை தமிழ் மக்களின் அரசியல் பிரதிகளாக தலைமைத்துவத்தை வகித்தனர்.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

தமிழர் தலைமைத்துவம் 

சரி, பிழை தவறுகளுக்கு அப்பால் ஒரு நூற்றாண்டு காலத்தை ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களின் தலைமைத்துவத்தினால் தமிழ் மக்கள் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக குடியேற்ற ஆட்சியாளர்களினால் கொண்டு வந்த போது தமிழ அரசியல் ஒரு பெரும் நெருக்கடியை சந்தித்தது. அப்போது ““Donoughmore means Thamils no more““ (டொனமூர் என்றால் இனி தமிழர்கள் இல்லை) என சேர் பொன் இராமநாதன் குறிப்பிட்டார்.

தமிழினம் கடந்த பாதையும்... கடக்க வேண்டிய பாதையும்.... | Eelam Tamils Sri Lanka

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் நிர்வாக அதிகாரிகளின் கையில் இருந்த தமிழர் தலைமைத்துவம் இந்தக் காலகட்டத்தில் தான் சட்டத்துறை சார்ந்தவர்களின் கைகளுக்கு மாறும் சூழலில் தோன்றியது. மாற்றமும் கண்டது.

1934-இல் தேர்தலில் வென்று ஜி ஜி. பொன்னம்பலம் தமிழர்களுக்கு தலைமை தாங்கினார். ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு தீர்வு எற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டார்.

ஆயினும் ஒற்றையாட்சியின் கீழ் தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிட்ட போவதில்லை தமிழர்களுக்கு ஜி.ஜி தீங்கிழைத்து விட்டார் என்று ஜிஜி யுடன் முரண்பட்டுக்கொண்டு எஸ்ஜே வி செல்வநாயகம் சமஸ்டியே தமிழர்களுக்கு ஒரே வழி என கூறி சமஸ்டி கட்சியை ஆரம்பித்தார்.

அந்தக் காலகட்டம் தமிழ் தலைமைகளுக்கு இடையிலான முரண்பாடு ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய காலகட்டம். அந்தக் காலகட்டத்திலும் தமிழ் புத்திஜீவிகளும் சமூகப் பிரதிகளும் அன்றைய ஊடகங்களும் சரியான முடிவை எடுத்துச் செயல்பட்டனர்.

தமிழினம் கடந்த பாதையும்... கடக்க வேண்டிய பாதையும்.... | Eelam Tamils Sri Lanka

இந்தப் பின்னணியில் 1956 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தமிழர்களின் தலைவராக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழர்களுக்கான தலைமைத்துவ இடைவெளியை நிரப்பினர். ஆயினும் அவரால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எதையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

பண்டாரநாயக்கா, டட்லிசேனாநாயக்கா ஆகிய சிங்கள தலைவர்களின் ஏமாற்று அரசியல் தந்திரத்திற்குள் அவராலும் நின்று பிடிக்க முடியவில்லை. சமஸ்டி என்ற கொள்கையை முன் வைத்தவர் இறுதியில் சிங்களத் தலைவர்களிடம் பிராந்திய சபை என்றும் மாவட்ட சபையென்றும் கீழ் இறங்கி எதையும் பெற்றுக் கொள்ள முடியாதவராய் சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்.

இறுதியில் 1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பு வந்த போது தனது அந்திமக்காலத்தில் ""தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்"" என்று தன் இயலாமையை பட்டவர்த்தமாக தன் வாயாலே ஒப்புவித்தார்.

இந்தக் காலகட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் நெருக்கடியை கொடுத்த காலகட்டம் தமிழ் மக்கள் சமஸ்டியா? தனி நாடா? என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய ஒருகாலகட்டம்.

அந்தக் காலகட்டத்திலும் தமிழ் மக்களின் புத்திகீவிகளும், ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் தமிழ் மக்கள் எடுக்க வேண்டிய பாதையை சரியாகவே வெளிப்படுத்தினர். அவர்களின் சரியான வெளிப்படுத்துகைதான் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுப்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகளை நிர்பந்தித்து தூண்டின என்று சொல்லலாம்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை தொடர்ந்து 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

கூட்டணியின் தலைவராக அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் தலைவராக இந்த காலகட்டத்தில் தலைமை தாங்கினார். ஆயினும் 1980ஆம் ஆண்டு இலங்கையின் தலைசிறந்த சிங்கள ராஜதந்திரிஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசியல் சாணக்கியத்துக்கு முன் அமிர்தலிங்கத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.

தமிழினம் கடந்த பாதையும்... கடக்க வேண்டிய பாதையும்.... | Eelam Tamils Sri Lanka

ஜே ஆர் முன்வைத்த மாவட்ட அபிவிருத்தி சபைக்கு அவர் இணங்கியதன் மூலம் தமிழ் மக்களின் ஆதரவை பெரிதும் இழக்க நேரிட்டது.அன்றைய பெரும் நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ் புத்திஜீவிகள் முன்னெழுந்து வந்தனர்.

குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களாக அன்று இருந்த கா.இந்திரபாலா, சீலன் கதிர்காமர், பாலகிருஷ்ணன், விரிவுரையாளர்களான மு.நித்தியானந்தன், மு திருநாவுக்கரசு போன்றவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவட்ட சபைக்கு எதிரான 1980 நடுப்பகுதியில் கருத்தமர்வு ஒன்றினை மேற்கொண்டனர்.

அந்தக்கருத்தமர்வில் தீப்பிழம்பாக ஆற்றப்பட்ட உரைகள் இன்றும் மாவட்ட விருத்தி சபை என்ற பெயரில் நூல் வடிவில் உள்ளது. இதுவே முதல் தடவையாக தமிழ் கல்விச் சமூகம் தமிழ அரசியலை வழிப்படுத்துவதற்கான முதல் அடியாகவும் அமைந்தது.

அதுவே ஆயுதப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான காலச் சூழலையும் ஏற்படுத்தியது எனலாம்.

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்! றீ(ச்)ஷாவின் சிறப்பு உற்பத்தி பொருட்கள் காட்சி

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்! றீ(ச்)ஷாவின் சிறப்பு உற்பத்தி பொருட்கள் காட்சி

தமிழ் மக்கள்

அன்றைய கால கட்ட நெருக்கடியை அறிவு பூர்வமாகவும், அரசியல் கோட்பாடு ரீதியாகவும் தமிழ் மக்களுக்கு கருத்துக்கள் காவிச் செல்லப்பட்டன.

அன்றைய காலத்தில் கல்விமான்களின் அரசியல் வியாக்கியானங்கள் உணர்வு தர்க்கம் புதிய பாதை போன்ற போராட்ட இயக்கங்களால் நடத்தப்பட்ட பத்திரிகைகளுடாக தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

இவ்வாறு கருத்தை கொண்டு சேர்த்ததில் அன்றைய கால தமிழ் பத்திரிகைகளும், ஊடகவியலாளர்களும் பெரும் பங்காற்றினர். அதே பணியை கருத்துக்காவிகளாக ஏற்பட்ட மாணவர்கள் வர்த்தகர்கள் சந்தை வியாபாரிகள் என பலரும் தொழில் பட்டிருந்தனர்.

தமிழினம் கடந்த பாதையும்... கடக்க வேண்டிய பாதையும்.... | Eelam Tamils Sri Lanka

காலத்தினதும் சூழலினதும் தேவை என்னவோ அந்தத் தேவையை கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் செய்து காட்டினர்.

அதன் மூலமே தமிழ் மக்களின் தீர்வு எந்தச் சமாதான வழிகளிலும் பெறமுடியாது என்பதும் புரட்சிகரமான ஒரு போராட்டத்தின் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வு கட்டப்படும் என்பதும் அறிவார்ந்த ரீதியில் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட காலம் அது. அதனைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்கான தலைமையை ஏற்றுக் கொண்டது.

ஆயுதப் போராட்டம் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் தமிழ் மக்களுடைய இறைமையை மீட்பதற்கும், தமிழ் மக்கள் கௌரவமாக வாழ்வதற்குமான வழியாகவும் அதே நேரத்தில் வேறு எந்த மார்க்கமும் இல்லை என்ற அடிப்படையிலுமே ஆயுதப் போராட்டம் தமிழர்களுக்கு தலைமை தாங்கியது. உலகளாவிய அரசியலிலும், பிராந்திய அரசியலிலும் ஏற்படும் மாற்றங்கள் விடுதலைக்காக போராடுகின்ற தேசிய இனங்களின் விடுதலையில் செல்வாக்கு செலுத்தும்.

அதே நேரத்தில் அந்தத் தேசிய இனம் வாழ்கின்ற நிலத்தின் கேந்திர தானமும் ஒரு முக்கிய பங்கை வகிக்க வல்லது.

ஈழத் தமிழர் வாழ்கின்ற தமிழர் தாயகம் சர்வதேச அரசியலுக்கும், பிராந்திய அரசியலுக்கும் ஒரு கேந்திர புள்ளியாக இருப்பதனால் சர்வதேச அழுத்தங்களும் பிராந்திய அழுத்தங்களும் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் செல்வாக்கு செலுத்துவது தவிர்க்க முடியாதது.

தமிழினம் கடந்த பாதையும்... கடக்க வேண்டிய பாதையும்.... | Eelam Tamils Sri Lanka

அத்தகைய பன்னாட்டு அரசியல் செல்வாக்கினை வென்றெடுப்பதற்கான அல்லது அதனை முகம் கொடுப்பதற்கான அறிவுபூர்வமான, தர்க்கபூர்வமான ஒரு நெருக்கடி விடுதலைப் போராட்டம் உச்சம்பெற்று ஒரு 5 ஆண்டுகளுக்குள்ளேயே தமிழர் தாயகத்தை நோக்கி படர தொடங்கிவிட்டது.

1986 ஆம் ஆண்டு இந்தியாவின் அனுசரணையுடன் ஈழத் தமிழர் பிரச்சனைக்கான ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட்டது.அந்த தீர்வு திட்டத்தை 1986 நவம்பர் 19 முன்வைக்கப்பட்டதால் அதனை நவம்பர் 19 யோசனை என்று அழைக்கப்படுகின்றது.

அதனை தமிழ் மக்கள் தரப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை அதற்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விச் சமூகம்  கருத்துருவாக்கங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் செய்து கொண்டு இருந்ததனால் அந்த நவம்பர் யோசனையில் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் மாற்றப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தமென தமிழர்களுக்கான ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டது.

அதனை விரும்பியோ விரும்பாமலோ ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஏற்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அத்தகைய ஒரு சூழலில் ஒரு தீண்ட பெரும் நெருக்கடியை கடப்பதற்கு தமிழ் புத்திஜீவிகளும், யாழ் பல்கலைக்கழகச் சமூகமும் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

"யாருக்காக இந்த ஒப்பந்தம்"" என்ற தலைப்பில் கருத்தமர்வுகளும், பிரச்சாரங்களும் தமிழர் தாயகத்தில் முடக்கி விடப்பட்டது.

அதன் மூலம் தமிழ் மக்களுக்கான விடுதலைக்கான பயணத்தில் இருக்கின்ற அனைத்து வகையான இடர்பாடுகளையும், சிக்கல்களையும் தெளிபடுத்தும் கருத்துக்களை அன்றைய தமிழ் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தினர். அது ஒரு நெருக்கடியான காலகட்டமாயினும் அனைத்து வகையான நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து தமிழ் புத்திகீவுகளும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் பங்காற்றின.

ராஜபக்சர்களை ஆதரித்த ஹக்கீம்! சபையில் அநுர தரப்பின் சரமாரியான பதிலடி

ராஜபக்சர்களை ஆதரித்த ஹக்கீம்! சபையில் அநுர தரப்பின் சரமாரியான பதிலடி

தமிழ் மக்களின் விடுதலை

இந்திய, இலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாமல், தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் புலிகள் இந்திய போர் நடைபெற்ற காலத்திலும் புத்திஜீவிகளும், சிவில் சமூக அமைப்புகளும், பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் தம் உயிரை பணயம் வைத்து தமிழ் மக்களின் அரசியல் வாழ்வுக்கான கருத்துக்களை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

அதனைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழர் தாயகத்தில் நிலைபெற்ற அரை அரசை அல்லது ஒரு நடைமுறை அரசை பாதுகாக்கவும் புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், ஊடகங்களும், தாயகத்துக்கு உள்ளேயும், தாயகத்துக்கு வெளியேயும் துணிச்சலாக அனைத்து பணிகளையும் செய்து இருக்கிறார்கள்.

தமிழினம் கடந்த பாதையும்... கடக்க வேண்டிய பாதையும்.... | Eelam Tamils Sri Lanka

2009 மே 14ஆம் திகதி  உடன் தமிழர் தாயகத்தில் நிலைபெற்ற அரையரசும் அதன்கட்டுமானங்களும் அழிக்கப்பட்டு விட்டது. அதன் பின் தமிழர் அரசியலில் ஏற்பட்ட தலைமைத்துவ இடைவெளியை நிரப்ப சம்பந்தர் இடப்பட்டார்.

அவர் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாமல் தமிழ் மக்களால் வெறுக்கப்படும் ஒரு தலைவராக மரணித்து போனார். அதன் பின்னான இடைவெளியை நல்லதோ கெட்டதோ அல்லது ஒரு தடியை தானும் தலைமைத்துவ இடைவெளியில் இட்டு நிரப்ப முடியாமல் உள்ளது.

கடந்த காலங்களிலெல்லாம் நல்லதோ, கெட்டதோ தலைமைத்துவ இடைவெளி ஏற்படுகின்ற போது ஏதோ ஒரு தலைமை என்ற பெயரில் ஒன்றை இட்டு நிரப்ப முடிந்தது.

ஆயினும் இப்போது எதையுமே இட்டு நிரப்ப முடியாத ஒரு நெருக்கடியை தமிழ் சமூகம் சந்தித்து நிற்கிறது. இந்த நெருக்கடியை கடப்பதற்கு கடந்த காலத்தில் தமிழ் சமூகத்தின் கல்விமான்களும், புத்தி ஜீவிகளும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும், ஊடகவியலாளர்கள், பத்திரிகைகள், இதர ஊடகங்கள் என அனைத்தும் ஒருமித்து செயல்பட்ட ஒரு காலம் இருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் கட்சிகளின் சீரழிவும், அவற்றின் பொறுப்பற்ற செயல்களும், இலக்கின்றிய செயற்பாடுகளும், ஒத்தடித்தனங்களும் தமிழ் மக்களின் அரசியலை ஆதாள பாதாளத்தில் தள்ளி வீழ்த்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் செல்வாக்கை தீர்மானிக்க வல்ல சக்திகளாக புத்திஜீவிகளும், சிவில் சமூக அமைப்புகளும், ஊடகங்களும், ஊடகவியலாளர்களும், படைப்பாளிகளும் உள்ளனர்.

இவர்கள் முன்வந்து தமிழ் சமூகத்தை சீர்படுத்தி பாதுகாக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமைத்துவத்திலும், அரசியல் கருத்தியலிலும், அரசியல் செயற்பாட்டிலும், செல் நெறியிலும் ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியை நிரப்புவதற்கும், தமிழ் சமூகத்தின் எதிர்கால அரசியலை முன்னெடுப்பதற்குமான பாதைகளை கண்டறிவதற்கும், வழிகாட்டுவதற்கும் தமிழ் புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் விருப்பு வெறுப்புகளை கடந்து தமிழ் தேசியம் என்ற அடித்தளத்தில் ஐக்கியப்பட்டு, ஒன்றிணைந்து பலமாக செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களை ஐக்கியப்படுத்தி தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தை தொடர்வதற்கு ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் ஊடகம் சார்ந்தோரும் பலமாக தொழிற் படாவிட்டால் தமிழர் அரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவே முடியாது. தமிழர் விடுதலைக்கான போராட்டத்தை தொடரவும் முடியாது.

ஆகவே புத்திஜீவிகளும், ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஒரு நேர்கோட்டில் பயணிக்க வேண்டியது இன்றைய காலத்தின் உடனடி தேவையாகும்.இடைவெளிகளை நாம் நிரப்பாமல் விட்டால் காலம் தன்பாட்டில் தன் கண்ணில் பட்ட எதையாவது ஒன்றை இட்டு நிரப்பி விட்டுச் சென்று விடும்.

ஆகவே அறிவார்ந்த தமிழ் சமூகம் இடைவெளிகளை சரிவர நிரப்ப வேண்டியது அவசியம். அதுவே தமிழர் அரசியலுக்கும், அதன் தொன்மையான பண்பாட்டுக்கும், தமிழ் சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கும், தொடர் இருப்பிற்கும் வழிசமைப்பதாக அமையும்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 24 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US