இணையத்தில் பேசுபொருளாகியுள்ள சஞ்சு சாம்சனின் வீடியோ
ஐபிஎல் தொடரின் 18ஆவது ஆட்டம் சண்டிகரில் நேற்று (05) நடைபெற்றது.
இதில் ராஜஸ்தான் றோயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை குவித்தது.
கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில்...
அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைச் சதமடித்து 67 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
Sanju samson is not happy
— ANSH • (@IMAnsh_18) April 6, 2025
his mistake...🔥🔥🔥
pic.twitter.com/lAd3MIS62D
இதையடுத்து, 206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 62 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் (Sanju Samson) 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதன்போது சஞ்சு சாம்சன் கோபத்தில் "பேட்"டை தூக்கிப்போட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவதோடு, கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |