கபில சந்திரசேனவின் மரணம் திட்டமிட்ட படுகொலையா..! எழுந்துள்ள சந்தேகம்
அரச திறைசேரியில் நிதி மோசடி மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கொடுக்கல் வாங்கல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து அரசு உடனடி மற்றும் பக்கச் சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
எதுல்கோட்டேயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில் நேற்று(08.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
திடீர் மரணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திறைசேரி நிதி மோசடி குறித்து முறைப்பாடுகளை முன்வைத்த இந்த அதிகாரியின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா? அல்லது மோசடிகளை மூடிமறைக்க நடந்த கொலையா? என்பது குறித்து கண்டறியப்பட வேண்டும்.

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழக்கில் பிரதான சாட்சியாளராக இருந்த கபில சந்திரசேனவின் மரணம் மர்மமாக உள்ளது. நீதிமன்றத்தில் உண்மைகள் வெளிவருவதைத் தடுக்க ஏதேனும் தரப்பினர் இதில் பின்னணியில் உள்ளனரா? என விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்படும் திகதிகளை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிப்பதானது, நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசியல் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான சூழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்காது என்ற பயத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டலாம் அல்லது மர்மமான முறையில் கொலை செய்ய வழிவகுக்கலாம்.
தற்போதைய அரசில் உள்ள அமைச்சர்களில் பலர் 2005 ஆம் ஆண்டு ராஜபக்சவினரை ஆட்சிக்குக் கொண்டு வரப் பாடுபட்டவர்கள். இந்த மோசடிகளுக்கும் அரசில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக நிலவுகின்றது.
ஊழலுக்கு எதிராகத் தண்டனை வழங்குவதில் அரசுக்கு உண்மையான நோக்கம் இருக்குமானால், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam